தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு அறிவிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்தி இருந்தாலும், மற்றபடி நேரடியாக களத்திற்கு வரவில்லை என்ற விமர்சனப் பார்வையும் விஜய் மீது முன்வைக்கப்படுகிறது. எனினும் முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விஜய், நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதேவேளையில், தேர்தல் வியூகங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தவெக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து அரசியல் பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில், விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து உளவுத் துறை அளித்த அறிக்கை அடிப்படையில் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் விஜய்க்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது அது அமலுக்கு வந்துள்ளது. நவீன ஆயுதங்கள் ஏந்திய 8 வீரர்கள் விஜய்க்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முன்னதாக தனி நிறுவனத்தினர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில் தற்போது மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் X, Y,Y PLUS,Z. ZPLUS மற்றும் SPG என ஆறு வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. SPG என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு பிரதமருக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கும். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 2018- ல் மக்களவையில் அரசு வெளியிட்ட தகவலில் இந்தியாவில் 300 பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.
Y பிரிவில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆயுதம் ஏந்திய ஒருவரும் பாதுகாப்பு அளிப்பார்கள். அதாவது 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். Y PLUS பாதுகாப்பின் கீழ், ஐந்து பணியாளர்கள், ஒரு CRPF மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இல்லத்தில் நிறுத்தப்படுவர். ஆறு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

