சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

ஆரோக்கியம் இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு விவசாயம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், சதிஷ்குமார் தனது சமீபத்திய வீடியோவில், தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி செலுத்தப்படுவதாகவும், டிஸ்யூ பேப்பரில் தர்பூசணி பழத்தை தொட்டு எடுத்தால் சிவப்பு சாயம் தெரியும் எனக் கூறியுள்ளார். இதனால் தர்பூசணி விவசாயிகள் அனைத்து பழத்திலும் இயற்க்கை நிறம் ஒட்டும் என்று கூறிவரும் நிலையில் இது விவசாயிகள் இடையே கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் பலர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்குப் பிறகு, சதீஷ்குமார் தனது கருத்தை விளக்கினார். “எல்லா பழங்களிலும் ஊசி செலுத்தப்படுவதில்லை, சிலர் தவறாக செய்கிறார்கள்” என அவர் கூறினார். மேலும், தர்பூசணி பழம் உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் விளக்கினார். இந்நிலையில், தர்பூசணி பழம் தொடர்பான கருத்து சர்ச்சையை உருவாக்கியதால், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தை கூடுதல் கவனத்தில் கொள்ள உள்ளார். சதீஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *