நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதியிடம் தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார்.
நீதிமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் அல்லது சிலை தவிர வேறு படங்கள் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் தலைமை நீதிபதியிடம் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தார்.