தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் பீங்கான் பானை ஒன்றை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த பானையில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட 33 பழங்கால ஆபரணங்கள் இருந்துள்ளன. மேலும் இவற்றின் காலம் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று கலைப்பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தாய்லாந்தின் நுண்கலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;
புத்தர் அமர்ந்த நிலையில் உள்ள செவ்வக வடிவ சிற்பத் தங்கத் தகடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது எட்டு சென்டிமீட்டர் அகலமும் 12.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டதுடன், நல்ல நிலையிலும் உள்ளது.
இரண்டாவதாக பொருள் தகரம் அல்லது ஈயத்தால் ஆன வளைந்த சட்டகத்தில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட சிற்பப் பலகை ஆகும். இது 11.5 செ.மீ அகலமும் 15.5 செ.மீ உயரமும் கொண்டது. பகையில் இதன் இடது பக்கத்தில் உள்ள உருவம், இந்து கடவுளான பிரம்மாவின் தாய்லாந்துத் தோற்றம் என்று நம்பப்படுகிறது. அதேபோல் பலகையின் இடதுபக்கம் உடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள உருவம் குறித்து தெரியவில்லை.

