இந்தியாவின் முன்னணி மின்சாதன உற்பத்தியாளரான ஆப்பிள் நிறுவனம், மிகப்பெரிய அளவிலான ப்ளூகாலர் வேலைகளை உருவாக்கிய ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து பிசினஸ் ஸ்டாண்ட்டர்ட் அறிக்கையின் படி, கடந்த 19 மாதங்களில் 1,00,000 புதிய நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அரசாங்கத்தின் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் இந்த வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உள்ளூர் உற்பத்தியினை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் 35,500 பேருக்கும், பெகாட்ரான் 14,000 பேருக்கும் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவே ஆப்பிள் நிறுவனம் பெரியளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
உதிரி பாகங்கள் மற்றும் சார்ஜர்கள் உள்பட ஆப்பிளின் மற்ற அமைப்பில் 40,000 பேருக்கு வேலை வாய்ப்பாக கிடைத்துள்ளது.