டி20 உலகக் கோப்பை அறையிறுதி: இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது

ஆப்ரிக்க நாடுகள் இங்கிலாந்து இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது. மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.
இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. 2வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.
கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *