ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தொண்டர்களிடம் உரையாற்றும்போது, அவர் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக தெரிவித்தார். மேலும், டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். தான் தனிப்பட்ட நன்மைக்காக அரசியலுக்கு வரவில்லை எனவும் அவர் கூறினார். செய்தியாளர் ஒருவர் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஒரு கேள்வி எழுப்பினார். தங்களை நேர்மையானவர் என மக்கள் நினைக்கிறார்களா அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஒருவராகவே பார்க்கிறார்களா என கேள்வி கேட்ட போது, தனது நேர்மையைப் பற்றிய கருத்துகளை அறிய பொதுமக்களிடம் கேளுங்கள் என பதில் கூறினார். தன் ராஜினாமாவிற்கு பிறகு அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும் என கெஜ்ரிவால் குறிப்பிட்டார். நான் மற்றும் சிசோடியா இருவரும் தேர்தலை சந்தித்து பொதுமக்களின் ஆதரவைப் பெற்று பிறகு பதிவுகளை ஏற்போம் என்று கூறினார். தானாக முன் வந்து முதல்வர் பதவியை நான் ஏற்க மாட்டேன் என தெரிவித்தனர். இது கட்சியின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான கட்டமாகும் எனவும் கூறியுள்ளார். கெஜ்ரிவால் கூறுகையில், தனது அரசியல் பயணத்தில் நான் நேர்மையை முக்கியமாகக் கருதுகிறேன் .எனது நேர்மை மீது நம்பிக்கை இருந்தால் மக்கள் எனக்கு தங்கள் வாக்குகளை செலுத்தி தம்மை ஆதரிப்பார்கள் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்றும் அவர் கூறினார். கூடுதலாக, தேர்தலை நடத்த பிப்ரவரி மாதம் வரை காத்திருக்காமல், மகாராஷ்டிராவில் நடைபெறும் தேர்தலுடன் டெல்லி தேர்தலையும் இணைத்து, நவம்பரில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மத்திய அரசை கேட்டுக்கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் செயலால் அரசியல் வட்டாரத்தில் ஒரு சில சலசலப்பு ஏற்பட்டுள்ளது.