தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நிறைவடைந்த நிலையில் இந்தியா 21 தங்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துன. இத்தொடரில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடத்தையும், இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
இதேபோல இந்தியா சார்பில் 9 தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 5 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர். அதிலும் அபிநயா என்கிற தமிழ்நாட்டு வீராங்கனை 2 தங்கப்பதக்கங்களை தன்வசமாக்கினார்.