பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில் அது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் புரொமோ ஒன்று கவனம் பெற்று வருகிறது.
உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்களின் மிகவும் ஃபேவரைட்டான தமிழ் ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கியதால் இந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் பார்வையாளர்கள் இருந்தனர். 1 முதல் 7வது சீசன் வரை சுவாரசியமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் கமல் ஹாசன். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் சேதுபதிதான் என்ற அதிகாரபூர்வ ப்ரோமோவும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தனர்.
இந்நிலையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற புதிய புரொமோவை பிக்பாஸ் டீம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட பிக்பாஸ் ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். புரொமோவை சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.