மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோர் டென் மார்க்கின் ஹோல்ம்கிரென் மற்றும் எல்மர் மோலர் ஜோடியை எதிர்கொண்டனர். இந்த போட்டியில், ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் அவரது ஜோடி 6-3, 7-6 (7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். கால் இறுதி சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான சாகேத் மைனேனி மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடியை எதிர்கொள்கிறது. சாகேத் மற்றும் ராம்குமார் ஜோடி, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியாவின் மைக்கேல் கீர்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பில்லி ஹாரிஸ் ஜோடியை வென்று, கால் இறுதி சுற்றில் முன்னேறியுள்ளனர்.

