ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவிற்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை அளித்த நிலையில் அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த போதிலும் பல மாநிலங்களில் பிரதான எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *