2025ல் தேர்தலில் ஆம் ஆத்மியை வெற்றிப் பெற செய்தால் பெண்களுக்கு 1000 ரூபாயிலிருந்து 2100 ரூபாயாக வழங்கப்படும்; அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அரசியல் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

டெல்லியில் பெண்களுக்கான புதிய திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரியில் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார்.
“டெல்லி மக்களுக்காக இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிட வந்துள்ளேன். இரண்டும் பெண்களுக்கானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 அதிஷி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது இத்திட்டம் டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் இன்னும் 10 -15 தேதிகளில் அறிவிக்கப்படும். தேர்தலில் வெற்றிப் பெற்றால் பெண்களுக்கு மாதம் 2100 ரூபாய் கொடுக்கப்படும். இதற்காக பெண்கள் நாளையில் இருந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *