முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இதுதொடர்பான சீமான் ட்விட்டர் பதிவில், ‘கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல் என்று சாடியுள்ளார்.
சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.