மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை “ஒரே நாடு ஒரே சந்தா” என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில், சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வு கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் ஒரே இணையதளத்தின் மூலம் அரசின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கள் துறைக்கு தொடர்பான தரவுகள் சர்வதேச அளவில் கிடைப்பது முக்கியமான அம்சமாகும். குறிப்பாக அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆய்வுகளுக்கான தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச அளவில் ஆய்வு கட்டுரைகளை சில வெளியீடுகள் தொடர்ந்து வெளியிடுகின்றன, இதனால் துறை சார்ந்த ஆராய்ச்சிக்கும், ஆய்விற்கும் இந்த கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை துறை சார்ந்த தனித்தனியாக கிடைக்க பெறுகின்றன. ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சந்தா முறையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான செயல்முறை யுஜிசி-யின் தலைமையில் தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் (INFLIBNET) மூலம் டிஜிட்டல் வலைத்தளமாக உருவாக்கப்படும். இந்த வலைத்தளத்தை மத்திய உயர்கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்படுத்தலாம். இதில் 30 சர்வதேச பதிப்பகங்களின் சுமார் 13,000 ஆய்வு கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் உள்ளன. இந்த திட்டத்திற்கு 2027 வரை ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது உயர்கல்வியில் மாணவர்களின் ஆய்வு திறன்களை சர்வதேச அளவில் மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரியில் டிஜிட்டல் வலைத்தளம் செயல்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *