தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நாளை பொறுப்பேற்கிறார்

அரசியல் இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கிறார் என தகவல் தெரிய வந்துள்ளது.
விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாளையே விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆட்சியமைக்க 118 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகிறார்.
விஜய்க்கு முதல்வராக, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இதனிடையே பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததையடுத்து ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை உரிமை கோரினார்.
விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரும் ஆளுநரைச் சந்தித்தனர்.
ஏற்கெனவே 3 முறை தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்த விஜய் 4ஆவது முறையாக இன்று மீண்டும் சந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *