ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்களின் மூலம் மொத்தம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ்நாட்டில் நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக முன்வந்துள்ளன என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

