இந்த வாரச் சின்னத்திரை

சின்னத்திரை செய்திகள்

நம் அனைவருக்கும் பிடித்தமான சின்னத்திரையின் வாராந்திர நிகழ்வுகளை செய்திகளாக உங்களுக்குத் தொகுத்து வழங்குவதே இந்த வாரச் சின்னத்திரை தொகுப்பு.

கொரோனா ஊரடங்கு காரணமாய் சின்னத்திரை படப்பிடிப்பு தொழில்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி, அது ஒளிபரப்பி வந்த தொடர்களை வாரத்திற்கு நான்கு நாட்களாக குறைக்க இருக்கிறார்களாம். வெள்ளிக்கிழமைகளில் தொடர்களை நிறுத்தி விட்டு திரைப்படம் ஒளிபரப்பப்போவதாக திட்டமிட்டுள்ளனர்.

இந்த வார டி.ஆர்.பியிலும் சன் டிவியே முந்துகிறது. முதல் மூன்று இடங்களை சன் டிவியின் தொடர்களே பிடிக்கிறது. விஜய் டிவிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டி.ஆர்.பியில் மீண்டும் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது.

ஹாட் ஸ்டாரில் தமன்னா நடிக்கும் முதல் வெப் தொடரான “நவம்பர் ஸ்டோரி” யின் முதல் எபிசோட் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “அன்புடன் குஷி” என்னும் தொடர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது அதன் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவின் முதலமைச்சர் நிவாரண நிதிக்காய் சன் டிவி குழுமம் அதன் சார்பாக பத்து கோடி ரூபாய் அளித்துள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மலையாள மொழியில் மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 குழுவில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, தொடர் கைவிடப்படும் அபாயத்தில் இருக்கிறது

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3 ஆம் சீசன் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • சந்தீப் குமார்

Leave a Reply

Your email address will not be published.