ரயில் தீ பற்றியதாக எண்ணி குதித்து வேறு ரயில் மீது மோதி 13 பேர் பலியான சோகம்.

இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விபத்துகள்

மகாராஷ்டிரா மாநிலம், ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக பயணிகள் பயத்தில் இறங்கினர். இதற்கிடையில், கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களை மோதியதால் ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மாநில அரசு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ₹5 லட்சம் நிவாரண தொகையை வழங்கும் என அறிவித்துள்ளது. மேலும், ரயில்வே அமைச்சகம், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ₹1.5 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. எஸ்.பி. மகேஷ்வர் ரெட்டி இதுகுறித்து கூறியதாவது, காயமடைந்தவர்கள் தற்போது ஜல்கான் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில்வே அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *