ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, மகாகவி பாரதியார் மண்டபம் பெயர் மாற்றம் செய்யப்படும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மற்றும் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பெயர் மாற்றம் செய்யும் விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரும் 6-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை வரும் குடியரசு தலைவர், பட்டமளிப்பு விழா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பலகையை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைக்கிறார்.
