கொரோனா தொற்று தடுப்பூசியால் நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படும் என ஆய்வு.

ஆரோக்கியம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம்

பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிமான்ஸ்) நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி மூலம் ஒரு சிறிய சதவீத மக்களின் மனித மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மார்ச் மற்றும் செப்டம்பர் 2020க்கு இடையில் நரம்பியல் அறிகுறிகளுடன் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் சிகிக்சைக்கு வந்த 3,200 நோயாளிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. இவர்களில் 120 நோயாளிகளுக்கு நரம்பு மண்டலம் தொடர்பான கோளாறுகளை உருவானது. 47% பேருக்கு நினைவு இழப்பு அல்லது மனக் குழப்பம் ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசி பெற்ற 116 நபர்களை ஆய்வு செய்தனர். இவர்களில் 29 பேருக்கு நோய் எதிர்ப்பு தொடர்பான நரம்பியல் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி பெற்ற 27 பேரும், கோவாக்சின் பெற்ற 2 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *