புதுச்சேரியை மிரட்டும் டெங்கு காய்ச்சல் ; இருவர் பலி, சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை புதுச்சேரியில் ஆயிரத்து 175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார மற்றும் நகராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மழை காலம் முன்னதாகவே தொடங்கியதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு பாதிப்பானது அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வீட்டில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *