கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்தை வெற்றி கொண்ட இந்திய அணி; சதம் விளாசிய விராட் கோலி

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. புனேவில் நடந்த போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 103*, சுப்மன் கில் 53, ரோகித் ஷர்மா 48 ரன்கள் எடுத்தனர். நடப்பு உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தை விராட் கோலி பதிவு செய்தார். 97 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 103 ரன்களை விராட் கோலி குவித்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *