தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகத்தின் விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் அதிகரித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக 10, 9 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பத்தாம் வகுப்பிற்கான பாடப்புத்தகங்கள் 790 ரூபாயில் இருந்து 1,130 ரூபாயும்,
9 ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகங்கள் 770 ரூபாயில் இருந்து 1110 ரூபாயாகவும், 7 ஆம் வகுப்பிற்கான பாடப்புத்தகங்கள் 860 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 6 ஆம் வகுப்பு புத்தகங்களின் விலை 790 ரூபாயில் இருந்து 320 ரூபாய் அதிகரித்து, 1,110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 ஆம் வகுப்பு புத்தகங்களின் விலையும் 690 ரூபாயில் இருந்து 310 ரூபாய் உயர்ந்து, 1000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.