மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.
திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துடன் பகிரப்பட்டது. இந்நிலையில், தனது கருத்துக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில், ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை என்று திமுக எம்.பி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அது தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுவெளியில் கருத்துகளை கூறும் போது, நாகரிகத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், செந்தில்குமாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.