இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, கடந்த 8 ஆம் தேதி IPL தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ முடிவு செய்யத்து. அன்றைய நாளில் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, மைதானத்தில் உள்ள ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன் பிறகு, பிசிசிஐ போர் பதற்றத்தை காரணமாகக் கொண்டு ஐபிஎல் தொடரை ஒரு வாரம் நிறுத்துவதாக அறிவித்தது. தற்போது, இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதையடுத்து, ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மே 17 ஆம் தேதியான இன்று முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட IPL போட்டிகள் இன்று (17-05-2025) மீண்டும் ஆரம்பிக்கப்படும். மேலும், இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளன. இந்த முடிவு மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
