விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. மொத்தமாக, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்திருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது.
20வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான சி.அன்புமணியை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார். இதனை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.