புவி இயற்பியல் ஆய்வில் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக தகவல்

இயற்க்கை உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அமைந்துள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், நிலத்தடி நீர் குறைவின் காரணமாக பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆராய்ச்சி காலத்தில், பூமியிலிருந்து 2,150 ஜிகாடன்கள் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பூமியிலிருந்து நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால், கடல் மட்டம் 0.24 அங்குலம் உயர்ந்துள்ளது. இதனால் பூமியின் நிறை விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு, அதன் சுழற்சி அச்சு ஆண்டுக்கு 4.36 செ.மீ சாய்வதற்கான காரணமாக அமைந்துள்ளது. தற்போது, பூமியின் அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது. நிலத்தடி நீர் கடலுக்கு மீண்டும் செல்லும் செயல்முறை, துருவ இயக்கத்தில் பாதிப்புகளை உருவாக்குகிறது. பூமியின் அச்சில் ஏற்பட்டுள்ள மாற்றம், வானிலை மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது; ஆனால், நிலத்தடி நீர் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால், நீண்டகால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலையை பாதிக்கக்கூடியவை. எனவே, நீடித்த நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது அவசியமாகிறது என அறிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *