உக்ரைனில் இரஷ்ய படைகளின் தாக்குதலினால் இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்த கடந்த பிப்ரவரியில், உக்ரைனில் எலான் மஸ்க் உதவியுடன் அவரின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை அளித்தது. மேலும் பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்தார்.
இந்நிலையில், “நான் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தால், இதை பற்றி அறிவது நன்றாக உள்ளதல்லவா..” என்று எலான் மஸ்க் டுவிட்டரில் திடீர் பதிவு ஒன்றை எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரஷ்ய அதிகாரிகள் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரின் டிவிட்டர் பதிவுகளையுன் உரையாடல்களையும் உற்று நோக்கும் இணைய கள ஆய்வாளர்கள், உக்ரைனுக்கு உதவியதற்காக, ரஷியாவால் எலான் மஸ்க்கிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழும்பியுள்ளனர்.இதனை தொடர்ந்தே எலான் மஸ்க், தான் மர்மமான முறையில் உயிரிழக்க நேரிடலாம் என பதிந்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கின்றனர்.