தமிழகத்தின் பிரபல இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மூத்த மகளான கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று மாலை நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மிக எளிமையாக இந்த திருமணம் நடந்தேறியது. மகளின் திருமணம் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள
ரஹ்மான் கூறுகையில், ‛‛மணமக்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் முன்னரே நன்றியை உரிதாக்கி கொள்கிறேன்” என்றார்.
கதீஜா தனது பதிவில், இதுதான் என் வாழ்வில் நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நாள். என்னவரை கரம் பிடித்து விட்டேன் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சினிமா துறையினரும், ரஹ்மானின் ரசிகர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.