இலங்கை அதிபர் இராஜினாமா

இலங்கை

அண்டை நாடான இலங்கை, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக கடும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இது அங்குள்ள மக்களின் மத்தியில் ஒரு தீவிர அமைதியின்மையையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ‘ராஜபக்சே சகோதரர்கள் ராஜினாமா செய்ய மறுத்தால், 11ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்’ என அங்குள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்

மக்களின் தொடர் போராட்டத்தினால் அங்கு மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் ராஜபக்சேயின் அலுவலகம் எதிரே மகிந்த ராஜபக்சேவின் எதிர்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 17 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த எம்.பி ஒருவரும் மரணமடைந்தார். இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தொடர் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.