எலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் இந்தியாவின் முதல் ஷோரூம் மும்பையில் அமைக்க திட்டம்.

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் வேலைவாய்ப்புச் செய்திகள்

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது முதல் விற்பனை மையத்தை தொடங்குவதாக கூறப்படுகிறது.மும்பைக்கு அடுத்ததாக, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது இரண்டாவது கார் ஷோரூமை திறக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிடுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான தொழிலதிபர் எலான் மஸ்க்கின் முதல் கார் ஷோ ரூம், மும்பையில் வரும் ஏப்ரல் மாதத்தில் திறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதி வரியை 20 சதவிகிதம் குறைத்ததன் பின்னணியில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கவுள்ளது.இந்த கார் ஷோரூம் திறப்பதற்காக, மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை டெஸ்லா நிறுவனம் வாடகைக்கு பெற்றுள்ளதாகவும், இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக சுமார் ரூ.35 லட்சம் செலவிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பைக்கு அடுத்ததாக, டெல்லியின் ஏரோசிட்டி பகுதியில் தனது இரண்டாவது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. மும்பையில் தனது முதல் ஷோரூமை திறப்பது உறுதியாகிய நிலையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் எலோன் மஸ்க் சந்தித்த நிலையில், டெஸ்லா இந்திய நகரங்களில் மும்பை மற்றும் டெல்லியில் இடங்களைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *