தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லும் தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்.

அரசியல் ஆன்மீக தளங்கள் இந்தியா கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் தடையை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி மகாதேவனின் உத்தரவின் அடிப்படையில், திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அனைத்து கோயில்களிலும் படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது, என்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, திருச்செந்தூர் கோயிலில் அன்றைய தினம் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது, அந்த யானை அதற்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்தபோது, இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய ஒரு துக்ககரமான நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாது. இந்நிகழ்வுக்கான ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *