பாகிஸ்தான் புதன்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, பாகிஸ்தான் அந்த கவுன்சிலில் உறுப்பினராக செயல்படும்.இந்த நிகழ்வை குறித்து பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் அக்ரம் கூறுகையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக, பாகிஸ்தான் ஆக்கபூர்வமாக செயல்படும். கவுன்சிலில் பாகிஸ்தானின் நிலையை அனைவரும் உணர்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றார். 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த கவுன்சிலில் பாகிஸ்தான் நியமிக்கப்படுவது இதுவரை எட்டாவது முறையாகும். இதற்கான வாக்கெடுப்பில், 182 வாக்குகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவாகின. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.

