சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்ற அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் கஜராஜ், ஈரோடு மகேஷ், நடன இயக்குனர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர்களோடு நடிகர் வடிவேலு தனக்கான பட்டத்தை வீட்டில் இருந்தபடி பெற்றுக்கொண்டார். அனைவருக்குமான பட்டங்களை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகத்தை அழைத்து வழங்கியது அந்த அமைப்பு.
இந்நிலையில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்றே ஓர் அமைப்பே இல்லையென்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் நிகழ்வுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும் அண்ணா பல்கலைக்கழகத்த பெயரும் சட்ட விரோதமாக அச்சிடப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு விருந்தினராவே தான் அழைக்கப்பட்டடேன் என்று நீதிபதி தரப்பில் விலாமைக்கப்பட்டுள்ள நிலையில் விழா அமைப்பாளர்களின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன.
அரங்கை அளித்ததைத் தவிர இந்நிகழ்வு உடனான எந்த தொடர்பும் தங்களுக்கு இல்லை என பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக துணை வேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
பொதுவாக ஹோட்டல்களில் வைத்து இதுபோன்ற விருது நிகழ்ச்சிகளை தனியார் அமைப்புகள் நடத்துவது வழக்கம். ஆனால் பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்க ஒன்று. நீதிபதி வள்ளிநாயகத்திடம் இந்நிகழ்வு அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெறுகிறது என்றும் நீதிபதி பங்கேற்கிறார் என்று எங்களிடம் அவர்கள் அனுமதி பெற்றிருக்க கூடும். இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இதுதொடர்பாக புகாரை போலீஸிடம் அளித்துள்ளோம். சட்ட ரீதியான நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.
