அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகம் இவ்விடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இங்கு அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தின் ஆணவங்கள் ஆகும்.
அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் இச்சோதனை நீடித்தது. இதில் ஏராளமான ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.