மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக அறிவிப்பு; மத்திய அரசு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நான் -கெசட்டட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், லேகோ பைலட்டுகள், ரயில்வே கார்டுகள், ரயில் நிலைய மேலாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் 2022-2023 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் ரயில்வே 1,509 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கிட்டத்தட்ட 650 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.