உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி

இந்தியா உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மலேசியா மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் ஆதித்யா அர்ஜுன் லாலாகே (34வது நிமிடம்), அரைஜீத் சிங் ஹுண்டால் (35’), சவுரவ் ஆனந்த் குஷ்வஹா (52’), கேப்டன் உத்தம் சிங் (57வது நிமிடம்) ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர். நெதர்லாந்து சார்பில் டிமோ போயர்ஸ் (5’), பெபின் வாண்டெர் ஹெய்டன் (16’), ஒலிவியர் ஹார்டென்சியஸ் (44வது நிமிடம்) கோல் போட்டனர். நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *