வழக்கமான உடல் பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா நிறுவனம்’ மூலம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63ஆவது படத்தில் நடிப்பதகாவும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் மூலம் எடுக்கப்படும் அந்தப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

