ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி; தங்கம் வெல்ல ரசிகர்கள் வாழ்த்து

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சீனா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகளின், ஹாக்கி அரையிறுதி சுற்றில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான ஆண்கள் அணி ஹாக்கி அரையிறுதிப் போட்டி தொடங்கியது. முதல் கட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தது. அதன்பின் 4-2 என்ற கணக்கில் இரண்டாம் கட்டத்தில் இந்தியா முன்னிலை வகித்தது.
மூன்றாவது கட்டத்தில் 4-3 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகித்தது. நான்காவது கட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தென்கொரியா அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்தியா ஹாக்கி ஆண்கள் அணி மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published.