நீரில் தத்தளிக்கும் குஜராத்:நர்மதா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு.

இந்தியா இயற்கை பேரிடர் இயற்க்கை சிறப்பு செய்திகள்

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு குஜராத், சௌராஷ்டிர மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் போர்பந்தர், சோம்னாத், மாதவிப்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. போர்பந்தர் உள்ள கொரடாச்சேரி நிரம்பி வழிவதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சௌராஷ்டிர, கட்ச் சாலை வெள்ளக்காடாக கட்சி அளிக்கிறது. அதே போல நர்மதா நதி உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகள் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் 95% விழுக்காட்டுக்கு மேற்பட்ட அணைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, சர்வதரோ அணை உள்ளிட்ட அனைத்து முக்கியமான அணைகளும் முழு கொள்ளளவுக்கு நிரம்பி வருகின்றன. அடுத்த சில நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒன்றிய அரசு, பேரிடர் மேலாண்மை குழுக்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *