துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓர் முக்கிய அமீரகம் ஆகும். இத்துபாயை ஆட்சி செய்பவர் முகமது பின் ரஷீத் ஆவர். இவர் துபாய் மன்னர் மற்றும் துபாயின் பிரதமர் ஆவார். இவர் இன்று ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க செயலை செய்திருக்கிறார். அது என்வென்றால் துபாய் நகரம் முழுவதும் இலவச ரொட்டி ஏடிஎம் மிஷன்களை நிறுவயது தான். இந்த ஏடிஎம் அப்படியென்ன சிறப்புவாய்ந்தது.?
துபாய் மன்னருக்கு ஓர் புகார் ஒன்று சென்றிருக்கிறது. அது என்னவென்றால் அமீரகத்தில் உள்ள மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பது தான். வெளிநாடுகளில் இருந்து துபாய் நகரில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை, அவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்ற அந்த புகார் தான். ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம் கொழிக்கும் ராஜ வம்சத்தில் ஒன்று துபாய் ராஜ வம்சமாகும்.
அப்படி செல்வம் கொழிக்கும் ராஜ வம்சத்தின் ஆட்சியில் பசி பட்டினி இருக்கவே கூடாது என்பதற்காக தான் இந்த இலவச ரொட்டி ஏடிஎம். இதில் ரொட்டியோ அல்லது பிரெட் தேர்வு செய்தால் உடனே அந்த இயந்திரம் குறிப்பிட்ட உணவை வழங்கும். இதுபோக இந்தத் திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினாலும் தங்களது கிரெடிட் கார்டு கொண்டு நன்கொடையும் வழங்கிட முடியும். பசியால் வாடுவோருக்கு உணவு இலவசம் என்ற துபாய் மன்னரின் இச்செயல் மகத்தானது என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.