இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கு – உலகம் முழுவதும் நான்கு பில்லியன் மக்கள் நேரலையில் கண்டள்ளனர்

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள்

உலகளவில் சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய நிகழ்வு இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மற்றும் யுனைடட் கிங்டம் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் இறுதிச் சடங்கு தான். இந்த இறுதிச் சடங்கு இதுவரை யாரும் கண்டிராத வகையில் பிரம்மாண்டமாகவும், பல நாட்கள் நடந்தேறியது. கடந்த செப்டம்பர் 8ம் தேதி தனது பால்மோரல் அரண்மனையில் காலமான ராணி இரண்டாம் எலிசபெத் உடல் லண்டன் கொண்டு வரப்பட்டது.
லண்டன் கொண்டு வரப்பட்ட ராணியின் உடல் அரசக் குடும்பத்தின் பாரம்பரிய அரண்மனையான பக்கிங்ஹாம் அரண்மனையில் 24 மணிநேரம் வைக்கப்பட்டது. அங்கு அரசக் குடும்பத்தில் தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்தி, இறுதிச் சடங்குகள் நடந்தது. பின்னர் ராணியின் உடல் அரசக் குடும்ப வழக்கப்படி வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு மூன்று நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது ராணியின் உடல். கிட்டத்தட்ட 16 நேரம் வரிசையில் காத்திருந்து ராணிக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
அதன்பின் செப்டம்பர் 18ம் தேதி, பத்து நாட்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடந்து நல்லடக்கம் செய்ய அனைத்து சம்பிரதாயங்களும் துவங்கின. உலகம் முழுவதுமிருந்து 2000 தலைவர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள லண்டனுக்கு வந்தனர். வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அப்பேக்கு எடுத்துவரப்பட்ட ராணியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அரசுக் குடும்ப உறுப்பினர்களை வழக்கமாக நல்லடக்கம் செய்யப்படும் வின்ட்ஸர் கேஸ்டிலுக்கு முழு ராணுவ மரியாதையுடம் எடுத்துச் செல்லப்பட்டு அவர் சவப்பெட்டியின் மேலிருந்த மகுடம், செங்கோல் மட்டும் உலக உருண்டை வடிவிலான ஓர் பொருள் பெறப்பட்டு அவரது சவப்பெட்டி ராயல் வால்ட் எனப்படும் ரகசிய அறைக்கு அனுப்பட்டது. பின்னர் அரசக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு ராணியின் கணவர் பிலிப் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படும். இந்த இறுதிச் சடங்கை நான்கு பில்லியன் மக்கள் நேரலையில் கண்டுள்ளதாக ஓர் புள்ளி விவரம் கூறுகிறது. அதாவது 400.1 கோடி மக்கள். உலகில் நடந்த எந்தவொரு நிகழ்விற்கும் இப்படியொரு எதிர்பார்ப்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.