சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சவரனுக்கு ரூ.720 வரை உயர்வு காணப்பட்ட நிலையில், பிற்பகல் நேரத்தில் உயர்வு ரூ.440 ஆக நிலைத்துள்ளது.அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 உயர்ந்து ரூ.12,515க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்க விலை நகை வாங்க விரும்பும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருமண காலம் மற்றும் விழாக்காலம் நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் செலவாக மாறியுள்ளது.உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்தது, டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், சர்வதேச பொருளாதார சூழல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

