அமெரிக்காவில் வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க் கொலை குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையான பதிவுகளை பகிர்ந்த ஆறு வெளிநாட்டவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.அவர்களின் பதிவுகள் கொலையை கொண்டாடும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த அமைச்சகம், “இத்தகைய கொடூர செயல்களை ஆதரிப்பவர்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை” என தெரிவித்துள்ளது.விசா ரத்து செய்யப்பட்டவர்கள் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, மெக்சிக்கோ, ஜெர்மனி மற்றும் பராகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

