டில்லி சென்ற தமிழக ஆளுநர் ரவி; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஆலோசித்ததாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் காரணிகள் குறித்தும் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து, அமித் ஷா மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், கள்ளச்சாராய மரணம் 65க்கும் மேலாக உயர்ந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சென்னையில் நிகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொலையாளிகள், கொலையில் பிரதான எதிரி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது, அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த காவல் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து விளக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் லிஸ்ட்டுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். முன்னதாக கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *