டில்லியில் வரும் 5-ம் தேதி, ராஜராஜ சோழன், ராஜேந்திரன் சோழன் பற்றிய சர்வதேச மாநாடு நடக்க உள்ளது. பிரவாசி பாரதிய திவஸ்’ எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு, வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில், மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் நடக்கவுள்ளது.
மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் பல நுாற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள், இந்துார் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவை தாண்டி, மலேஷியா வரை நடந்த சோழர்களின் ஆட்சி பற்றியும் தெரிந்து கொள்வதற்காக, வரும் 5ல் தனி மாநாடு நடத்தப்பட உள்ளது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை, அகண்ட தமிழ் உலகம் அமைப்பு, டில்லி பாரத் பாரதி, பா.ஜ., ஆதரவாளர்கள் இணைந்து, இந்த மாநாட்டை நடத்துகின்றன.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் நடக்கும் மாநாட்டில், பல்கலை துணை வேந்தர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதுபோன்று சிறு வீடியோக்களை பார்ப்பதற்கு NRI தமிழுக்கு Subscribe செய்யுங்கள்