இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் மற்றும் தமிழகத்திலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுனர் . அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் காணப்பட்டது. எனவே, திங்கட்கிழமை (இன்று) ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை என ஷரியத் முறையின்படி உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் சமூக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

