குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளன.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. வரும் மார்ச் பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளன. அதாவது இந்த திட்டத்தின் கீழ் நேரடியாக பயன்பெற உள்ள போகும் பெண்களின் லிஸ்ட் எடுக்கப்படும். இதற்கு பின்வரும் வரையறைகள் உள்ளன. அவர்கள் வறுமைகோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாருமே அரசு ஊதியம் பெற கூடாது. அந்த பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும். அதாவது குடும்ப தலைவியாக இருக்க வேண்டும். மாறாக வேறு இடங்களில் வேலை செய்ய கூடாது.
அரசின் வேறு சலுகைகளை பெற்றால் தவறு இல்லை. ஆனால் அரசு ரீதியாக ஊதியம் பெற கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் அந்த மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவி என்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக குடும்ப தலைவனுக்கு மனைவி இருந்தால் அவர் தானாக குடும்ப தலைவியாக ஏற்றுக்கொள்ளப்படுவார். இதற்காக ரேஷன் கார்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியது இல்லை.
இதற்கான லிஸ்ட் போடும் பணிகள் முடிந்ததும் எத்தனை பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது, குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மார்ச் மாதம் திட்டம் அறிவிக்கப்படும். ஆனால் அதே மாதம் திட்டம் தொடங்கப்படாது. மார்ச் அறிவிப்பின் போது ஜூனில் இருந்து தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட உள்ளது. ஏனென்றால் இன்னும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து முடியவில்லை. மே இறுதிவரை அந்த பணிகள் நடந்து வங்கி கணக்கு விவரங்கள் சேர்க்கப்படும். அதற்கு பின் வங்கி கணக்கிற்கு ஜூன் மாதத்தில் இருந்து பணம் செலுத்தப்படும். ஜூன் மாதம் இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.