அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலைகளும், உளவியல் ரீதியான சிக்கல்களும்

இந்தியா செய்திகள் தமிழ்நாடு மற்றவை

சமீப காலமாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தியை ஊடகங்களில் அதிகம் காணமுடிகிறது. இதற்கு முன்னால் இதுபோல தற்கொலைகளே இல்லையா.? இந்த தலைமுறை மட்டுமே இதுபோல ஓர் விபரீத முடிவுகளை மேற்கொள்கின்றனரா.? சற்று ஆராய்ந்துப் பார்த்தால் இது உண்மையல்ல. எல்லாக் காலகட்டங்களிலும் மாணவர்கள் மனஉளைச்சல், தேர்வில் தோல்வி, இன்னும் சில காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போது மட்டும் தற்கொலைகள் அதிகரிக்க காரணம் என்ன? அதிகம் ஊடகங்களில் வருவதற்குக் காரணம் என்ன? மாணவப் பருவத்தில் இருக்கும் சில சுமைகளே இதற்கு காரணம். ஒன்று இன்றையக் காலகட்டத்தில் பல போட்டித் தேர்வுகள், அந்தப் போட்டித் தேர்வுகளுக்கு அளவுக்கடந்த உழைப்பு மட்டும் எழுதுவோரின் எண்ணிக்கை இதுபோன்ற சில காரணிகள் மாணவர்களின் கனவை பதம் பார்க்கின்றன. இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல் போகவே மாணவர்கள் விபரீத முடிவிற்கு தள்ளப்படுகின்றனர்.
இரண்டாவது காரணம் பெற்றோர்களின் கண்டிப்பு இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு சற்று குறைந்தே காணப்படுகிறது. விருப்பப்பட்ட அனைத்தும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியப் பின் அது கிடைக்காத போது மன விரக்தி ஏற்பட்டு தற்கொலை முடிவிற்கு மாணவர்கள் செல்கின்றனர்.
மூன்றாவது மாணவர்கள், ஆசிரியர்கள் இவர்கள் இருவரும் தான் அதிகம் ஒன்றாக நேரத்தை செலவிட வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கிடையே அந்த இணக்கமாக சூழ்நிலை, ஆசிரியர்கள் என்ற கனிவும், மரியாதையும் இன்றைய காலகட்ட மாணவர்களுக்கு குறைந்துக் காணப்படுவது போன்ற காரணங்களால் ஆசிரியர்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக அவர்களிடம் அணுக வாய்ப்பில்லாமல் போகிறது. இதெல்லாம் எதிர்காலத்தில் கவனிக்கப்படவில்லை என்றால் மாணவர்கள் சமுதாயம் மிகப் பெரிய சிக்கலுக்கு உள்ளாவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.