விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவர் முதல் எதிர்கட்சித் தலைவர் வரை

அரசியல் இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

தமிழ் சினிமா உலகில் பல நடிகர்கள், நடிகைகள் தங்கள் முத்திரையைப் பதித்து தங்களுக்கான ஓர் இடத்தை நிரந்தரமாக பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த் அவர்களுக்கு நிச்சயம் ஓர் தனி இடமுண்டு. நடிகர்களுக்கென வகுத்த அத்தனை இலக்கணங்களையும் இவர் தவிடுபொடியாக்கியவர். இவர் 1952ம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் பிறந்தார். நடிப்பின் மீதிருந்த ஆசையால் சென்னை வந்த இவர், ஆரம்பக் காலக்கட்டத்தில் பல இயக்குநர்கள், தத்தாரிப்பாளர்கள், நடிகைகளால் புறக்கணிக்கப்பட்டவர். ஏன்றென்றால் இவர் மிகவும் கருப்பாக இருக்கிறார் என்று. அதையெல்லாம் புறந்தள்ளி ஓர் முன்னணி கதாநாயகனாக கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ரசிகர்களை மகிழ்வித்தார். திரையில் மட்டும் இவர் கதாநாயகன் இல்லை திரைக்குப் பின்னும் இவர் அவ்வாரே வாழ்கை வாழ்கிறார். இவரிடம் உதவியென்று யார் வந்தாலும் இல்லையென்ற வார்த்தையே இவரிடம் இருந்ததில்லை. விஜயகாந்த அலுவலகம் எப்போது சென்றாலும் அறுசுவை உணவு பரிமாறப்படும் என்ற பேச்சும் இதுவரை இருந்துக் கொண்டிருக்கிறது.
இவர் சினிமா புகழையும் தாண்டி, அரசியலிலும் கால் பதித்து, அதிலும் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தினார். இவர் கட்சி முறையாக ஆரம்பிக்கும் முன்னரே இவரது ரசிகர் மன்றம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றிக் கண்டனர். அதன்பின் 2005ம் ஆண்டு முறையாக “தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்” என்ற கட்சியைத் தொடங்கினார். முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின் தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியக உருவெடுத்தபின் பிராதன கட்சிகள் இவரோடு கூட்டணி வைக்க அரைமோதின. 2011ம் ஆண்டு யாரும் எதிர்பார்த்திராத வகையில் எதிர்கட்சித் தலைவராகவும் சட்டமன்றத்தில் பொறுப்பேற்றார்.
இவர் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவரது காலக்கட்டம் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக பெரிதும் பாரட்டப்பட்டவர். இவர் தலைவராக இருந்தக் காலக்கட்டத்தில் தான் நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *